மக்களவைத் தேர்தல் : ஏப்ரல் 19 இல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல்...

ஏப்ரல் 19 இல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல்

Mar 16, 2024 - 16:19
0 241
மக்களவைத் தேர்தல் : ஏப்ரல் 19 இல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல்...

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மக்களவைத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையர்கள் கூட்டாக அறிவித்தனர். அதன்படி, தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 19 இல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ-வாக இருந்த விஜயதரணி ராஜினாமா செய்ததால் அந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜுன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User