Sathyaraj: ”சார் அந்த மோடி பயோபிக்..?” நக்கலாக கண்டிஷன் போட்ட சத்யராஜ்!

பிரதமர் மோடியின் பயோ பிக் படத்தில் நடிக்க சத்யராஜ் கண்டிஷன் போட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

May 29, 2024 - 13:58
Updated: 2 years ago
0 322
Sathyaraj: ”சார் அந்த மோடி பயோபிக்..?” நக்கலாக கண்டிஷன் போட்ட சத்யராஜ்!

சென்னை: 1980, 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கிய சத்யராஜ், தற்போதும் பிஸியான நடிகராக வலம் வருகிறார். அமைதிப்படை படத்தில் வரும் அம்மாவசை போன்ற நக்கலான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சத்யராஜ், பொது நிகழ்ச்சிகளிலும் அதே ஸ்டைலில் மாஸ் காட்டுவது வழக்கம். தற்போது அவரது நடிப்பில் வெப்பன், மழை பிடிக்காத மனிதன் படங்கள் வெளியாகவுள்ளன. இதனிடையே மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் சத்யராஜ் கலந்துகொண்டார். விஜய் மில்டன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ளார். 

விஜய் ஆண்டனியுடன் சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்துள்ளனர். முக்கியமாக கேப்டன் விஜயகாந்த் நடிக்க வேண்டிய கேரக்டரில் சத்யராஜ் நடித்துள்ளார். இந்நிலையில், மழை பிடிக்காத மனிதன் டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சத்யராஜிடம் கூலி படத்தில் நடிப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சத்யராஜ், கூலி படத்தில் கமிட்டானது பற்றி அக்ரிமெண்ட் இருக்கு, அதனால் எந்த அப்டேட்டாக இருந்தாலும் படக்குழு தரப்பில் இருந்து வெளியாகும் எனக் கூறினார். இதனால் கூலி படத்தில் சத்யராஜ் நடிப்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இந்தப் படத்தில் சத்யராஜ் தான் ரஜினிக்கு வில்லன் என செய்திகள் வெளியாகின. ஆனால், கூலியில் ரஜினியின் நண்பனாக சத்யராஜ் நடிக்கவுள்ளாராம். 

அதேநேரம் லோகேஷ் இயக்கும் படங்களில் ஹீரோ தவிர்த்து வேறு யார் கமிட்டானாலும், அதனை சீக்ரெட்டாக வைத்திருப்பார். அபிஸியலாக அப்டேட் வெளியாகும் போதே, யாரெல்லாம் நடிக்கவுள்ளனர் என்பது குறித்து தெரியவரும். ஆனால், கூலி படத்தில் சத்யராஜ் நடிப்பது பற்றி, அபிஸியல் அப்டேட் வெளியாகும் முன்பே இந்தத் தகவல் வைரலாகி வருகிறது. இதனால் லோகேஷ் கனகராஜ் உட்பட கூலி படக்குழுவினரும் அதிர்ச்சியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், கருப்புச் சட்டை அணிந்துகொண்டு... காவிச் சட்டையில் வலம்வரும் மோடி பயோ பிக் படத்தில் நடிப்பது பற்றியும் சத்யராஜ்ஜிடம் கேட்கப்பட்டது. இந்த கேள்வியை கேட்டதுமே நக்கலாக சிரித்த சத்யராஜ், அப்படி யாரும் கேட்கவில்லை என பதிலளித்தார். மேலும், அப்படியே நடிச்சாலும் மணிவண்ணன் மாதிரி ஒரு இயக்குநர் டைரக்ட் பண்ணா மோடி வாழ்க்கை வரலாறு ஒரிஜினலா வரும். அல்லது வெற்றிமாறன், பா ரஞ்சித், மாரி செல்வராஜ் இவர்களில் யாராவது எடுத்தால் மோடி பயோ பிக் நல்லா வரும்ன்னு நினைக்கிறேன் என்பதாக சத்யராஜ் கூறியுள்ளார். 

மோடி பயோ பிக் குறித்து சத்யராஜ் நக்கலாக விளக்கம் கொடுத்துள்ளது டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதனால் மோடியாக சத்யராஜ் நடிக்கவிருப்பதாக வெளியான தகவல்கள் வதந்தி என்று தெரியவந்துள்ளது. சித்தாந்த ரீதியாக மோடிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் சத்யராஜ், நடிப்பில் அதையெல்லாம் கணக்கில் எடுக்க மாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால், அதற்கும் சேர்த்து தற்போது பதிலடி கொடுத்துள்ளார் நக்கல் மன்னன் சத்யராஜ். முன்னதாக தந்தை பெரியாரின் பயோ பிக் படத்தில் சத்யராஜ் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 4
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User