Ajith: அஜித்துடன் இணைந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி... இப்படியொரு பிளாஷ்பேக் இருக்கா..?

அஜித், டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி சந்தித்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

May 29, 2024 - 15:51
0 256
Ajith: அஜித்துடன் இணைந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி... இப்படியொரு பிளாஷ்பேக் இருக்கா..?

ஐதராபாத்: அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள அஜித், இரு தினங்களுக்கு முன்னர் ஐதராபாத் சிட்டியில் பைக்கில் வலம் வந்த வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து குட் பேட் அக்லி ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் ட்ரெண்டாகின. இந்நிலையில், டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் அஜித்தும் சந்தித்துக் கொண்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல், டோலிவுட்டில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி என்றால் ரசிகர்களை கேட்கவே வேண்டாம். ரஜினி ஸ்டைலில் இப்போதும் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இன்னொரு பக்கம் அவரது மகன் ராம் சரணும் டோலிவுட்டை ஒரு கலக்கு கலக்கி வருகிறார். ஆர்.ஆர்.ஆர் வெற்றியைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், குட் பேட் அக்லி படப்பிடிப்புத் தளத்தில் சிரஞ்சீவியுடன் அஜித் எடுத்துக்கொண்ட போட்டோ ரசிகர்களிடம் பலவிதமான ஏதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த மீட்டிங் குறித்து சிரஞ்சீவி தனது இன்ஸ்டாகிராமில் பதிவுட்டுள்ளார். அதில், விஸ்வம்பர படப்பிடிப்பின் போது அஜித்தை சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அஜித்தின் முதல் படமான பிரேம புஸ்தகம் இசை வெளியீட்டு விழாவில் தான் கலந்துகொண்டது பற்றியும், அப்போது அஜித்துடன் பேசிக்கொண்டது பற்றியும் எமோஷனலாக குறிப்பிட்டுள்ளார். அஜித்தின் இரண்டாவது பாதியை பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது எனக் கூறியுள்ள சிரஞ்சீவி, ஷாலினி தனது படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளது பற்றியும் சிரஞ்சீவி குறிப்பிட்டுள்ளார்.  

சிரஞ்சீவியின் இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்டும், அஜித்துடன் அவர் எடுத்துக்கொண்ட போட்டோவும் இணையத்தை கலங்கடித்து வருகிறது. சீக்கிரமே இந்த காம்போவில் ஒரு படம் உருவாக வேண்டும் என்றும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேபோல், அஜித் – ராம் சரண் கூட்டணியில் ஒரு படம் வந்தால் சூப்பராக இருக்கும் எனவும் கூறி வருகின்றனர். அஜித்தின் குட் பேட் அக்லி, சிரஞ்சீவியின் விஸ்வம்பர என இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User