ரஸ்க், பிஸ்கெட்டில் மறைத்து போதைப்பொருள் கடத்தல்.. வடசென்னை பட பாணியில் புழல் சிறையில் சம்பவம் !

புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3பிரிவுகளில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Apr 13, 2024 - 21:54
0 191
ரஸ்க், பிஸ்கெட்டில் மறைத்து போதைப்பொருள் கடத்தல்.. வடசென்னை பட பாணியில் புழல் சிறையில் சம்பவம் !

புழல் சிறையில் கைதிகளுக்காக கொடுக்கப்பட்ட ரஸ்க், பிஸ்கெட் பாக்கெட்டுகளில் போதைபொருட்களை மறைத்து கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3பிரிவுகளில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள், நண்பர்கள் பிஸ்கட், பழங்கள் உள்ளிட்டவற்றை கைதிகளுக்கு கொடுப்பது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், விசாரணை சிறையில் கைதிகளுக்கு கொடுக்கப்பட்ட பார்சல்களை சிறை காவலர்கள் சோதனை செய்தனர். அப்போது அதில் சில ரஸ்க் பாக்கெட்டில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல மற்றொரு பார்சலில் சோதனை செய்ததில் பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து ரஸ்க், பிஸ்கெட் பாக்கெட்டுகளில் போதைப்பொருட்களை மறைத்து கொடுத்த சதீஷ்குமார், தினேஷ், பாக்கியலட்சுமி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். மேலும் உறவினர்கள் மூலம் சிறைக்குள் கஞ்சாவை கொண்டு வர முயன்ற விசாரணை கைதிகள் யூடியூப் நாகராஜ், குள்ள அஜய், பிரதீப்ராஜ், மனோஜ்குமார், அப்பாஸ் ஆகிய 5 பேர் மீதும் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User