ரெட் அலர்ட் : எந்தந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ?

டிட்வா புயல் வலுவிழந்தாலும் சென்னை உள்பட 3 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளையும் மழை தொடரும் என்பதால் சென்னைஉள்பட 4 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Dec 01, 2025 - 12:14
Updated: 8 months ago
0 412
ரெட் அலர்ட் : எந்தந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ?
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ?

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை(டிச. 1) முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மேலும், புயல் சின்னம் அடுத்த 2 நாள்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வரும் டிச. 3 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச. 2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கான விடுமுறை உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

இன்றைய தினம் காலை முதலே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி இருந்தனர். ஆனால் விடுறை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து 4 மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User