Ramayana: தயாரிப்பாளராகும் KGF யாஷ்… பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணம்… வெளியானது அப்டேட்
கேஜிஎஃப் மூலம் பான் இந்தியா ஹீரோவாக என்ட்ரியான யாஷ், தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுக்கவுள்ளார்.
சென்னை: கேஜிஎஃப் படத்தில் ராக்கி பாய் கேரக்டரில் நடித்து பிரபலமானவர் யாஷ். இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் அதிரி புதியாக ஹிட் அடித்தன. இதனையடுத்து கேஜிஎஃப் மூன்றாம் பாகமும் விரைவில் உருவாகவுள்ளது. கேஜிஎஃப் வெற்றிக்குப் பின்னர் பான் இந்தியா அளவில் ராக் ஸ்டாராக மிரட்டி வருகிறார் யாஷ். தற்போது டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வரும் யாஷ், அடுத்து தயாரிப்பாளராகவும் களமிறங்குகிறார். அதுபற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.
ராமாயணத்தை பின்னணியாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார் நித்தேஷ் திவாரி. பாலிவுட்டில் உருவாகும் இந்தப் படம் பான் இந்தியா மொழிகளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ், சூர்ப்பனை கேரக்டரில் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இத்திரைப்படத்தின் தயாரிப்பில் யாஷும் இணைந்துள்ளது பாலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. யாஷ் தொடங்கிய மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ், நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ராமாயணம் படத்தை தயாரிக்கிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)