மதுரை தொகுதிக்கே வராதவர் சு.வெங்கடேசன்... குற்றம்சாட்டிய செல்லூர் ராஜூ

மதுரையில் வெற்றி பெற்று எம்.பியான சு.வெங்கடேசன், தொகுதி பக்கமே வரவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.

Apr 12, 2024 - 13:18
0 207
மதுரை தொகுதிக்கே வராதவர் சு.வெங்கடேசன்... குற்றம்சாட்டிய செல்லூர் ராஜூ

தமிழ்நாட்டில் வரும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான டாக்டர் சரவணனை ஆதரித்து மதுரை மாவட்டம் பரவை பகுதியில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய அவர், கடந்த தேர்தலில் மதுரையில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன், தொகுதி மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார். 

மேலும், தொகுதி பக்கமே அவர் தலையை காட்டவில்லை எனக்கூறிய செல்லூர் ராஜூ, மதுரை மக்கள் சு.வெங்கடேசனை பார்த்திருக்கவே மாட்டார்கள் என கூறினார். இப்போது சு.வெங்கடேசன் மீண்டும் ஓட்டு கேட்டு வருகிறார் என்று குறிப்பிட்ட செல்லூர் ராஜூ,  அவரை மக்கள் நம்ப மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User