Coolie: கூலி ஷூட்டிங்... ஐதராபாத் சென்ற ரஜினிகாந்த்... விமான நிலையத்தில் காத்திருந்த பிரபலம்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்தப் படமான கூலி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஐதராபாத் கிளம்பிச் சென்றுள்ளார் ரஜினிகாந்த்.

Jul 04, 2024 - 12:45
0 358
Coolie: கூலி ஷூட்டிங்... ஐதராபாத் சென்ற ரஜினிகாந்த்... விமான நிலையத்தில் காத்திருந்த பிரபலம்!
கூலி படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்ற ரஜினி

சென்னை: கூலி திரைப்படம் மூலம் முதன்முறையாக இணைந்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணி. தனது கடைசி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வேண்டும் என ரஜினியே விரும்பிக் கேட்டுக் கொண்டதாக சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. அதனால் ரஜினிக்காக கைதி 2ம் பாகம் படப்பிடிப்பை தள்ளிவைத்துவிட்டு கூலி கதையை ரெடி செய்தார் லோகேஷ். மேலும் சில கதைகளை லோகேஷ் கூறியிருந்ததாகவும், ஆனால், ரஜினியோ கூலி ஸ்க்ரிப்ட்டை செலக்ட் செய்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூலி டைட்டில் டீசரை வெளியிட்டு ரஜினி ரசிகர்களுக்கு வைப் கொடுத்த லோகேஷ், படத்தையும் தரமாக கொடுப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.   

வேட்டையன் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த சூப்பர் ஸ்டார், தற்போது கூலி படத்துக்கு ரெடியாகிவிட்டார். லோகேஷும் ப்ரீ புரோடக்‌ஷன் வேலைகளை முடித்துவிட்டு ரஜினிக்காகவே காத்திருந்தார். கூலி ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் அது தள்ளி வைக்கப்பட்டது. பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா ஆகியவற்றில் ரஜினி பங்கேற்றதால் தான் கூலி படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவில்லை எனவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் நேற்று கூலி படத்தில் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் இணைந்துள்ளதாக லோகேஷ் டிவிட் செய்திருந்தார். அதோடு ரஜினியுடன் நடிப்பவர்கள் பற்றிய அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியாகும் என குறிப்பிட்டிருந்தார்.   

இதனால் லோகேஷ் கனகராஜ்ஜின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்க, ரஜினி இன்று ஐதராபாத் கிளம்பிச் சென்றுள்ளார். கூலி படப்பிடிப்புக்காகவே ரஜினி ஐதராபாத் சென்றுள்ளதாகவும், நாளை முதல் படத்தின் ஷூட்டிங் தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜ்ஜும் அவரது குழுவினரும் ஏற்கனவே ஐதராபாத் சென்றுவிட்ட நிலையில், தற்போது ரஜினியும் சென்னையில் இருந்து விமானத்தில் அங்கு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயற்சித்தனர். ஆனால், செய்தியாளர்களை சந்திக்காத ரஜினி, ரசிகர்களுக்காக தனது கையை மட்டும் அசைத்துவிட்டு அங்கிருந்து விரைந்தார்.  

கூலி முதற்கட்ட படப்பிடிப்பு நாளை ஐதராபாத்தில் தொடங்கவிருப்பதாகவும், அதில் ரஜினியின் போர்ஷன்களை எடுக்க லோகேஷ் பிளான் செய்துள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில், ஐதராபாத் சென்ற ரஜினியை அவரது நெருங்கிய நண்பரும் தெலுங்கு முன்னணி ஹீரோவுமான மோகன்பாபு விமான நிலையம் சென்று வரவேற்றுள்ளார். ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து ரஜினியும் மோகன்பாபுவும் வெளியாகும் வீடியோக்கள் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன. இதனிடையே கூலி ஷூட்டிங் தொடங்கும் முன்பே இப்படத்தில் ரஜினியுடன் நடிப்பவர்களின் பட்டியலை லோகேஷ் வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User