Rajini: ரஜினிக்கு மெகா ஆஃபர் கொடுத்த டோலிவுட் பிரபலம்... தலைவர் 173, தலைவர் 174 அப்டேட் வெயிட்டிங்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 172 டைட்டில் டீசர் வரும் 22ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் அடுத்த ப்ராஜெக்ட்கள் பற்றிய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.

Apr 18, 2024 - 17:58
Updated: 2 years ago
0 411
Rajini: ரஜினிக்கு மெகா ஆஃபர் கொடுத்த டோலிவுட் பிரபலம்... தலைவர் 173, தலைவர் 174 அப்டேட் வெயிட்டிங்

சென்னை: ஜெயிலரை தொடர்ந்து ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் கமிட்டானார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதன்படி லால் சலாம், வேட்டையன் என இந்த இரண்டு படங்களையும் லைகா நிறுவனம் தயாரித்தது. இதில் ரஜினி கேமியோவாக நடித்த லால் சலாம் வெளியாகிவிட்ட நிலையில், வேட்டையன் அக்டோபரில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துவிட்டது. அதேபோல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் இயக்கும் தலைவர் 172 படத்திற்காக ரெடியாகிவிட்டார் ரஜினி. இப்படத்தின் டைட்டில் டீசர் வரும் 22ம் தேதி வெளியாகிறது.  

தலைவர் 172 ஷூட்டிங் முடிந்ததும் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ரஜினி நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் ஜெயிலர் 2ம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதா இல்லையா என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் ரஜினியின் தலைவர் 173, தலைவர் 174 படங்களை தயாரிக்கும் நிறுவனங்களின் பெயர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ரஜினியின் 173வது படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.  

அதேபோல், ரஜினியின் 174வது படத்தை பிரபல தெலுங்குப் பட நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவன தில் ராஜூ, இந்த முறை சூப்பர் ஸ்டாருடன் இணையவுள்ளார். இந்தப் படத்திற்காக ரஜினிக்கு 300 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க ரெடியாகவுள்ளாராம் தில் ராஜூ. இதுதான் ரஜினிக்கு சமீபத்தில் கிடைத்துள்ள மிகப் பெரிய ஆஃபர் எனத் தெரிகிறது.   

அதேநேரம் இந்த இரண்டு படங்களின் இயக்குநர்கள் யார் என்பது பற்றி எந்த தகவல்களும் வெளியாகவில்லை. ரஜினிக்காக ஜெயிலர் 2ம் பாகத்துக்கான கதையை நெல்சன் ரெடி செய்து வருவதாக சொல்லப்பட்டது. ஆனால், ஜெயிலர் முதல் பாகத்தில் ரஜினியின் மகனாக நடித்த வசந்த் ரவி, அதுபற்றி தனக்கு எந்த தகவல்களும் தெரியவில்லை என சமீபத்தில் கூறியிருந்தார். எனவே ரஜினியின் தலைவர் 173, 174 இயக்குநர்கள் யாராக இருக்கலாம் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User