கோவை தொழிலதிபரிடம் சுருட்டிய ரூ.300 கோடி.. சிக்கிய சீட்டிங் பேமிலி.. எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க..!

Apr 18, 2024 - 18:05
Updated: 1 year ago
0 397
கோவை தொழிலதிபரிடம் சுருட்டிய ரூ.300 கோடி.. சிக்கிய சீட்டிங் பேமிலி.. எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க..!

கோவையில் தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகள் மற்றும் பணத்தை ஏமாற்றியதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையை சேர்ந்தவர் தொழிலதிபர் சிவராஜ். இவர் பீளமேடு பகுதியில் மின்காற்றாலை அலுவலகத்தை நடத்தி வருகிறார். இந்த அலுவலகத்தில் பணிபுரிந்த 8 பேர், சிவராஜ்-க்கு சொந்தமான சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை போலி ஆவணம் தயாரித்து அபகரித்ததாகவும், ரூ.100 கோடியை ரூபாய் மோசடி செய்ததாகவும் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவராஜின் நிறுவனத்தில் இயக்குநர்களில் ஒருவராக சேர்ந்த அஸ்வின்குமார் என்பவர், சிவராஜின் கையெழுத்தை போலியாக உருவாக்கி, அவரது சொத்துகளை அபகரித்ததாக தொழிலதிபரின் வழக்கறிஞர் கதிரேசன் தெரிவித்துள்ளார். வருமானவரி பிரச்னையில்  உதவி செய்வதாக கூறி உள்ளே வந்த அஸ்வின்குமார், படிப்படியாக தனது குடும்பத்தை சேர்ந்தவர்களை நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தி. சிவராஜின் சொத்துகளையும், பணத்தையும் ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக ஏற்கனவே வசந்த், சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அஸ்வின்குமார் தலைமறைவாக உள்ள நிலையில், அவரது மனைவி ஷீலா, மகள் தீக்ஷா, மருமகன் சக்தி சுந்தர் ஆகியோரை கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே தலைமறைவாக உள்ள அஸ்வின்குமாரை கைது செய்ய போலீசார் மும்முரம் காட்டி வருகின்றனர். https://vgship.com/

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் தொழிலதிபருக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை அபகரித்த விவகாரம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 1

Comments (0)

User