அதிகரிக்கும் போதைபொருள் கலாசாரம்... அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்...

தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாசாரத்தை அதிகரித்து வருவதாகக் கூறி அதனை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 9 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Mar 04, 2024 - 12:41
0 195
அதிகரிக்கும் போதைபொருள் கலாசாரம்... அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்...

தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து இருப்பது பெரும் தலைகுனிவு என்றும், இதனை தடுக்காத திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் எனவும் அக்கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக அறிவித்திருந்தார். திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாஃபர் சாதிக், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி தலைமறைவானார். தொடர்ந்து அவருக்கு போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் அவருக்கு லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பித்துள்ளனர். இதுவே தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து விட்டதை காண்பிப்பதாகவும், இதனை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். 

அதனடிப்படையில் சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் 9 மாவட்ட செயலாளர்கள், மக்கள் பங்கேற்புடன் அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தம்பிதுரை, பா.வளர்மதி, பரமசிவம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User