Prabhas: “பிரபாஸ் திருமணம் பண்ணவே மாட்டார்..” உண்மையான காரணத்தை போட்டுடைத்த ராஜமெளலி!

பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் இன்னும் திருமணம் செய்துகொள்ளாதது ஏன் என ராஜமெளலி சொன்ன காரணம், ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Jun 12, 2024 - 11:11
0 365
Prabhas: “பிரபாஸ் திருமணம் பண்ணவே மாட்டார்..” உண்மையான காரணத்தை போட்டுடைத்த ராஜமெளலி!

சென்னை: பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பின்னர் பான் இந்தியா அளவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் பிரபாஸ். ராஜமெளலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக ரிலீஸான பாகுபலி, இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இதனால் பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, இயக்குநர் ராஜமெளலி, இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட பலரும் உலகளவில் பிரபலமாகினர். பாகுபலிக்குப் பின்னர் பிரபாஸ் நடித்த அனைத்து படங்களும் பான் இந்தியா மார்க்கெட்டை குறிவைத்தே வெளியாகின.  

சாகோ, ராதே ஷ்யாம், சலார் வரிசையில் அடுத்து கல்கி திரைப்படமும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக சொல்லப்படும் கல்கி 2898 ஏடி, வரும் 27ம் தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில் பிரபாஸுடன் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இந்நிலையில், கல்கி படத்தின் ட்ரெய்லர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ட்ரெய்லர் ஹாலிவுட் ஸ்டைலில் இருந்தாலும், படமாக வெற்றிப் பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

இதனிடையே பிரபாஸின் திருமணம் குறித்து இயக்குநர் ராஜமெளலி ஓபனாக பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 44 வயதான பிரபாஸ் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார். சிங்கிள் பசங்க என்ற கேப்ஷனுக்கு முன்னோடியாக இருந்த பிரேம்ஜியே இரு தினங்களுக்கு முன்னர் இந்து என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருத்தணியில் நடைபெற்ற பிரேம்ஜியின் திருமணம், ஏராளமான 90ஸ் கிட்ஸ்களுக்கும் சிங்கிள் பசங்களுக்கும் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த லிஸ்ட்டில் பிரபாஸ், சிம்பு, விஷால் ஆகியோர் மட்டும் சிங்கிள் என்ற கெத்தை விட்டுக்கொடுக்காமல் மாஸ் காட்டுகின்றனர்.

இவர்களில், பிரபாஸ் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என ராஜமெளலி சொன்ன காரணம், பலரையும் தலை சுற்ற வைத்துள்ளது. அதாவது, பிரபாஸ் மிகவும் சோம்பேறி எனவும், திருமண விஷயத்தில் அவர் இப்படித்தான் சோம்பேறியாக இருப்பதாகவும் ராஜமெளலி கூறியுள்ளார். ஒரு பெண்ணை கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் பேசுவது அவருக்கு பெரிய வேலையாக இருக்கிறதோ என்னவோ?. இந்த ஒரே காரணத்துக்காக தான் பிரபாஸ் இன்னும் திருமணமே செய்துகொள்ளவில்லை என தான் நினைப்பதாக ராஜமெளலி பேசியுள்ளார். 

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் பிரபாஸ் – அனுஷ்கா காதல் என்ன ஆனது என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஆதிகாலம் முதலே பிரபாஸும் அனுஷ்காவும் காதலிப்பதாக செய்திகள் வந்ததே, அப்புறம் எப்படி இந்த ஜோடி பிரிந்தது எனவும் கேள்வி கேட்டு வருகின்றனர். முக்கியமாக பாகுபலி படத்தின் ஷூட்டிங்கின் போது, பிரபாஸ், அனுஷ்கா இடையே கெமிக்கலே இல்லாமல் கெமிஸ்ட்ரி பத்திக்கொண்டு எரிந்ததாக எல்லாம் பேசப்பட்டது. அதெல்லாம் ராஜமெளலிக்கு தெரியாமலா இருந்திருக்கும்?, அவரே இருவருக்கும் திருமணம் பேசி முடித்திருக்கலாம் என்று பங்கம் செய்து வருகின்றனர். அதேபோல் சோம்பேறித்தனத்தால் பிரபாஸ் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தால், காலம் முழுக்க அவர் அப்படியே இருப்பதில் தவறே இல்லை என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதேநேரம் பிரபாஸோ! கல்கி திரைப்படம் எப்படியாவது ஹிட்டாகிவிட வேண்டும், இல்லையென்றால் இருக்கிற மார்க்கெட்டும் போய்விடும் என பதற்றத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User