Vadivelu: வடிவேலுவுக்கு ஜோடி தமன்னாவா..? மாஸ்டர் பிளான் போடும் சுந்தர் சி!

அரண்மனை 4 வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கவுள்ள அடுத்தப் படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jun 12, 2024 - 10:23
0 383
Vadivelu: வடிவேலுவுக்கு ஜோடி தமன்னாவா..? மாஸ்டர் பிளான் போடும் சுந்தர் சி!

சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான அரண்மனை 4, சூப்பர் ஹிட் அடித்தது. ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததோடு, பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடி ரூபாய் வசூலித்தது. தொடர்ச்சியாக சுந்தர் சி இயக்கிய படங்கள் பிளாப் ஆன நிலையில், அரண்மனை 4 சூப்பரான கம்பேக் கொடுத்தது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸுக்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், அரண்மனை 4 வெற்றியைத் தொடர்ந்து கலகலப்பு படத்தின் 3ம் பாகம் இயக்க ரெடியாகிவிட்டார் சுந்தர் சி. இதில், மிர்ச்சி சிவா, விமல் இருவரும் ஹீரோவாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷார்ட் ஷெட்யூலில் ஒரு படத்தின் ஷூட்டிங்கை மொத்தமாக முடித்துவிடுவதில் சுந்தர் சி கில்லாடி. இதனால் தனது அடுத்தப் படத்துக்கும் பக்காவாக பிளான் செய்துவிட்டாராம். அதன்படி சுந்தர் சி-இன் புதிய படத்தில் வைகைப் புயல் வடிவேலு கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. சுந்தர் சி, வடிவேலு, பிரசாந்த் கூட்டணியில் வெளியான வின்னர் படத்தின் காமெடிகள், ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட். அதனையடுத்து இதே கூட்டணியில் ரிலீஸான லண்டன் திரைப்படமும் காமெடியில் கலங்கடித்தது. ஆனால், அதன்பின்னர் வடிவேலும் ஃபீல்ட் அவுட் ஆக, கூட்டணியை மாற்றினார் சுந்தர் சி.

இந்நிலையில், மாமன்னன் மூலம் கம்பேக் கொடுத்த வடிவேலு, அடுத்து ஃபஹத் பாசிலுடன் இணைந்து மாரீசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதேநேரம் சுந்தர் சி-யும் வடிவேலுவை வைத்து ஒரு ஹாரர் ப்ளஸ் காமெடி படத்தை இயக்க முடிவு செய்துள்ளாராம். முக்கியமாக இந்தப் படத்தில் தமன்னாவும் லீடிங் ரோலில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அரண்மனை 4 சூப்பர் ஹிட் ஆனதால், மீண்டும் சுந்தர் சி-க்கு கால்ஷீட் கொடுத்துள்ளாராம் தமன்னா. இதனால் அரண்மனை சீரிஸில் இருந்து அடுத்த பாகம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், அரண்மனை சீரிஸ்ஸாக இல்லாமல், இன்னொரு ஹாரர் மூவியை இயக்க சுந்தர் சி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதுபற்றி அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரேநேரத்தில் கலகலப்பு 3, வடிவேலு கூட்டணியில் ஒரு படம் என மீண்டும் பிஸியாகிவிட்டார் சுந்தர் சி. இதற்கெல்லாம் அரண்மனை 4ம் பாகத்தின் வெற்றி தான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்தாண்டு இதுவரை தமிழில் ரிலீஸான படங்களில் அரண்மனை 4 மட்டுமே அபிஸியலாக 100 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User