Play Boy ஆன Husband..வசமாக சிக்கிய வீடியோ !

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி அளித்த மனுவில் தனது கணவருக்கு 500-க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு இருந்ததாக இருந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி வழக்கு தொடுத்திருந்தார் .

Jan 30, 2024 - 18:18
0 271
Play Boy ஆன Husband..வசமாக சிக்கிய வீடியோ !

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி அளித்த மனுவில் தனது கணவருக்கு 500-க்கும் மேற்பட்ட  பெண்களுடன் தொடர்பு இருந்ததாக இருந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி வழக்கு தொடுத்திருந்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி என்ற பெண் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாக்கல் செய்த மனுவில், எனக்கு  விவேக்ராஜ் என்பவருக்கும் திருமணம் ஆகி சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில்  எனது கணவரின் தொலைபேசியை பார்த்த போது அதில் பல பெண்களிடம் ஆபாச வீடியோ கால் ஸ்கிரீன் சாட் மற்றும் அந்தரங்க உறுப்புகளின் படங்களை தொலைபேசியில் வைத்துள்ளார் என தெரிவித்தார். 

மேலும் அத்துடன்  கணவர் விவேக்ராஜ் வங்கியில் வேலை பார்ப்பதால் அங்கு வரும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவியரிடம் பேசி சுமார் 500 முதல் 1000 ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் வைத்துள்ளார். மேலும் இந்த ஆபாச விடியோவை பற்றி தனது கணவர் மற்றும் அவரது  பெற்றோரிடம் தெரிவித்த  போது அவர்கள் இதைப் பற்றி வெளியே யாரிடமும் கூறக்கூடாது என்றும் என்னை மிரட்டினர். அதனைத்தொடர்ந்து  தான் இரண்டு மாத கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் தன்னை அடித்து துன்புறுத்தியதால் கரு சிசுவில் கலைந்து விட்டது என தெரிவித்தார்.

இந்நிலையில்  இது தொடர்பாக தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் புகார் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது கணவர் மீது  அளிக்கப்பட்ட புகார் மீது தஞ்சை மகளிர் போலீசார் விசாரணைக்கு  தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சுகுமார குரூப் முன்பு விசாரணை வந்தது. இந்த வழக்கு குறித்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சிபிசிஐடி தரப்பு காவல் துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User