நான் நீக்கமா.? கண்ணதாசன் பொதுச்செயலாளரே அல்ல..மன்சூர் அலிகான் காட்டம்

அலுவலகத்தில் இருந்து பொருட்களை திருடிச்சென்றவர் கண்ணதாசன் என மன்சூர் அலிகான் குற்றச்சாட்டு

Mar 16, 2024 - 10:58
0 173
நான் நீக்கமா.? கண்ணதாசன் பொதுச்செயலாளரே அல்ல..மன்சூர் அலிகான் காட்டம்

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசன் அல்ல என்பதால், தன்னை நீக்கியதாக அறிவித்த அவர் மீது யாரும் கோபப்பட வேண்டாம் என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்கப்படுவதாகவும், கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, கட்சித் தலைவருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும், பொதுச்செயலாளருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இது தொடர்பாக மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஜனநாயக புலிகள் இயக்கத்திற்கு பொதுச்செயலாளராக பாலமுருகன் என்பவர் உள்ளதாகவும், கண்ணதாசன் ஆபிஸ் பாய் எனவும் குறிப்பிட்டுள்ளார். கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்பதாக கூறி கண்ணதாசன் ஏமாற்றியதாகவும், அலுவலகத்தில் இருந்து மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை அவர் திருடிச் சென்றதாகவும் மன்சூர் அலிகான் குற்றஞ்சாட்டியுள்ளார். கண்ணதாசன் தரப்பு உறுப்பினர்களை விடுவித்து, தேர்தல் ஆணையத்தில் ஒப்புதல் பெற்றுவிட்டதாகவும், அவர் மீது யாரும் கோபப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User