இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்...  நாளை மும்பை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் நாளை மும்பையில் நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மும்பை செல்லவுள்ளார். 

Mar 16, 2024 - 10:44
0 238
இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்...  நாளை மும்பை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசியக் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்தான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் நாளை மும்பையில் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி மணிப்பூரில் தனது பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கினார். தற்போது மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் இந்த யாத்திரை, நாளை மும்பை தாதரில் நிறைவுபெறவுள்ளது. 

சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில் யாத்திரை நிறைவு செய்யப்படவுள்ளது. அன்று மாலையே மும்பை சிவாஜி பார்க்கில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. அதில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திர பவார் கட்சி தலைவர் சரத்பவார் உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிரது. இவ்விழாவில் கலந்து கொள்ள நாளை காலை விமானம் மூலம் மும்பை செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொள்வதுடன், இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User