மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம்.. பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்..

புதிய பேருந்து நிலையத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்

Mar 13, 2024 - 13:54
0 222
மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம்.. பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்..

மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வீட்டு வசதி மற்றம் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.90.50 கோடி மதிப்பீட்டில் 6.98 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தப்பேருந்து நிலையத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், உணவகம், ஏ.டி.எம். மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார். ஒன்றரை ஆண்டுக்குள் மாமல்லபுரம் பேருந்துநிலையம் கட்டி முடிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User