Sivakarthikeyan: விஜய் ஸ்டைலில் ரசிகர்களுடன் சந்திப்பு… அரசியலுக்கு வருகிறாரா சிவகார்த்திகேயன்..?

சிவகார்த்திகேயன் இரு தினங்களுக்கு முன்னர் தனது ரசிகர்களை சந்தித்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ டீசராக வெளியாகி வைரலாகியுள்ளது.

Mar 13, 2024 - 14:18
0 221
Sivakarthikeyan: விஜய் ஸ்டைலில் ரசிகர்களுடன் சந்திப்பு… அரசியலுக்கு வருகிறாரா சிவகார்த்திகேயன்..?

சின்ன திரையில் இருந்து சினிமா… ஹீரோவான குறுகிய காலத்திலேயே அடுத்த சூப்பர் ஸ்டார் என கொண்டாடிய ரசிகர்கள்… இப்போது விஜய் ஸ்டைலில் அரசியலுக்கும் வருகிறாரா என கோலிவுட்டையே பதற வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். மாவீரன், அயலான் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன், அடுத்து அமரனாக களமிறங்கவுள்ளார். இந்த நிலையில் தான் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்துள்ளார் எஸ்கே. 

சென்னை போரூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்பில், தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஆனால், ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சி முழுவதும் ஒரு அரசியல் மாநாடு போல நடந்து முடிந்துள்ளது. ”மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்..” இவன் அகில இந்திய தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் என்ற பேனரே பலருக்கும் ஜெர்க் கொடுத்துள்ளது.    

மஞ்சளும் நீலமும் சூழ நடுவில் சிவகார்த்திகேயன் போட்டோவுடன் பேட்ஜ் அணிந்தபடி அணிவகுத்துள்ளனர் நற்பணி மன்ற நிர்வாகிகள். இதையெல்லாம் பார்த்தால் சிவகார்த்திகேயனும் விஜய் ஸ்டைலில் அரசியல் தான் தனது வேட்கை என பஞ்ச் டயலாக் பேசிவிடுவாரோ என எதிர்பார்க்க வைத்துள்ளது. கையெடுத்து வணங்கியபடி ரசிகர்களூக்கு வைப் கொடுத்த சிவகார்த்திகேயன், அரசியலிலும் வலது காலை எடுத்து வைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

“எனக்குன்னு யாரும் இல்லை… எல்லாமே என் ரசிகர்கள் தான்… எனக்கும் நிறைய பிரச்சினைகள் இருக்குது..” என மேடையில் கண் கலங்கினார் சிவகார்த்திகேயன். அதையெல்லாம் ஓவர்டேக் செய்யும் படி, தனது ரசிகர்களுடன் நடந்த சந்திப்பின் வீடியோவை மினி டீசராக வெளியிட்டு விஜய் தரப்பினருக்கு தக் லைஃப் கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயனின் அடுத்த மூவ் கோலிவுட்டில் வெற்றிடமாகும் தளபதி பட்டம் தான் என சொல்லப்பட்ட நிலையில், நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு பல யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User