Maharaja: ”லட்சுமி எங்க வீட்டு சாமி சார்..” ஆக்ஷனில் மிரட்டும் விஜய் சேதுபதியின் மகாராஜா ட்ரெய்லர்!

விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா படத்தின் புதிய ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Jun 11, 2024 - 18:09
0 280
Maharaja: ”லட்சுமி எங்க வீட்டு சாமி சார்..” ஆக்ஷனில் மிரட்டும் விஜய் சேதுபதியின் மகாராஜா ட்ரெய்லர்!

சென்னை: விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ள மகாராஜா, இந்த வாரம் 14ம் தேதி ரிலீஸாகிறது. நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ள இந்தப் படம் சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், இயக்குநர் பாரதிராஜா, மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே வில்லனாக நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார் விஜய் சேதுபதி. ஆனால், இனி நடித்தால் ஒன்லி ஹீரோ தான் அதிரடியாக முடிவெடுத்துள்ள விஜய் சேதுபதி, மகாராஜாவில் மாஸ் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. முன்னதாக இப்படத்தின் ட்ரைலரையும் படக்குழு வெளியிட்டிருந்தது. அதில், சலூன் கடைக்காரரான விஜய் சேதுபதி தனது வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை என போலீஸில் புகார் கொடுக்கச் செல்கிறார். ஆனால் யார் அல்லது எது அந்த லட்சுமி என்பதை ரொம்பவே சஸ்பென்ஸாக வைத்துள்ளது படக்குழு. இதுவே மகாராஜா படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதுகுறித்து விஜய் சேதுபதியும் மகாராஜா படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் செம்ம ஹைப் கொடுத்து பேசியிருந்தார். 

இந்நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக புதிய ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு. தற்போது வெளியான மகராஜா படத்தின் புதிய ட்ரெய்லர், இன்னும் தாறுமாறாக மிரட்டியுள்ளது. முக்கியமாக விஜய் சேதுபதியின் ஆக்டிங், ஆக்ஷன் இரண்டும் படத்துக்கு பெரிய பலமாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இதனால் மகாராஜா மூவி விமர்சன ரீதியாக மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விஜய் சேதுபதிக்கு மகாராஜா சூப்பரான கம்பேக் கொடுக்கும்பட்சத்தில், மீண்டும் கோலிவுட்டில் மிகப் பெரிய ரவுண்ட் அடிப்பார் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். மகாராஜாவை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ட்ரெய்ன் திரைப்படம் வெளியாகவுள்ளது. இவை தவிர மேலும் சில படங்களிலும் விஜய் சேதுபதி பிஸியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 2
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User