Maanaadu 2: சிம்பு - SJ சூர்யா கூட்டணியில் மீண்டும் Time Loop… மாநாடு 2-க்கு ரெடியான வெங்கட் பிரபு!

சிம்பு, எஸ்ஜே சூர்யா, வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mar 23, 2024 - 13:02
0 283
Maanaadu 2: சிம்பு - SJ சூர்யா கூட்டணியில் மீண்டும் Time Loop… மாநாடு 2-க்கு ரெடியான வெங்கட் பிரபு!

ஃபீல்ட் அவுட்டாகி சரியான படங்கள் அமையாமல் இருந்த சிம்பு, மாநாடு மூலம் சூப்பராக கம்பேக் கொடுத்தார். முதன்முறையாக சிம்பு, வெங்கட் பிரபு, எஸ்ஜே சூர்யா என மூவர் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்தது. மாநாடு தொடங்கியது நாள்முதலே பல தடைகளையும் பிரச்சினைகளையும் சந்தித்தது. வழக்கம் போல சிம்புவும் சரியான நேரத்திற்கு ஷூட்டிங் வருவதில்லை என பஞ்சாயத்து கிளம்பியது. ஆனாலும் ஒருவழியாக 2021 நவம்பரில் வெளியான மாநாடு மாஸ் ஹிட் கொடுத்தது. 

டைம் லூப்-ஐ பின்னணியாக வைத்து சயின்ஸ் பிக்‌ஷனில் பக்கா கமர்சியல் மூவியாக வெளியானது மாநாடு. சிம்பு, எஸ்ஜே சூர்யா இருவரும் போட்டிப் போட்டு நடிக்க, ரசிகர்கள் ரிப்பீட் மோடில் தியேட்டர் சென்றனர். இதனால் மாநாடு 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பிலும் இணைந்தது. இதனையடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என பிஸியான சிம்பு, மீண்டும் கோலிவுட் ரேஸில் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். 

தற்போது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனது 48வது படத்தில் கமிட்டாகியுள்ளார் சிம்பு. தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் மாநாடு கூட்டணியில் இணையவுள்ளாராம் சிம்பு. அதாவது மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் இயக்க வெங்கட் பிரபு பிளான் செய்துள்ளதாகவும், அதில் சிம்புவும் எஸ்ஜே சூர்யாவும் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

வெங்கட் பிரபு தற்போது விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்கி வருகிறார். இது முடிந்ததும் சிவகார்த்திகேயனுடன் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள்ளாக சிம்பு எஸ்டிஆர் 48 படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபுவுடன் மாநாடு 2ம் பாகத்தில் இணைவார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 1
Angry Angry 0

Comments (0)

User