Kamal: திரையுலகில் ராஜபார்வை கொடுத்த குரு… ராஜமரியாதை செய்த கமல்… ட்ரெண்டாகும் போட்டோஸ்

கமல்ஹாசன் கேரியரில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்கள் ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பேசும் படம் ஆகியவை மிக முக்கியமானது.

Mar 18, 2024 - 16:55
0 272
Kamal: திரையுலகில் ராஜபார்வை கொடுத்த குரு… ராஜமரியாதை செய்த கமல்… ட்ரெண்டாகும் போட்டோஸ்

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கமல், தமிழ் மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தனி அடையாளமாக காணப்படுகிறார். கமல்ஹாசனின் ஆரம்பகாலத்தில் கே.பாலச்சந்தர் தான் அவரது குருவாக இருந்தார். அவரது வரிசையில் கமலின் கேரியரில் மிகப் பெரிய மாற்றம் கொடுத்தவர் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்.  

கமலின் நூறாவது படமான ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, வசனங்களே இல்லாமல் ரிலீஸான பேசும் படம் என பல புதிய முயற்சிகளில் கமல்ஹாசனை பட்டைத் தீட்டியவர் சீங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். இக்கூட்டணியில் வெளியான ஒவ்வொரு படமும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் உள்ளன. இந்நிலையில் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்க்கு பாராட்டு விழா நடைபெற்றது.

 

இதில், கமல்ஹாசன், இயக்குநர்கள் மணிரத்னம், சந்தான பாரதி, அருண் மாதேஸ்வரன், மடோன் அஸ்வின், மஞ்ஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம், நடிகர்கள் சித்தார்த், ஒய்ஜி மகேந்திரன், சுஹாசினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களை இயக்கியுள்ளார் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User