மகளின் இறுதி விருப்பம்: அரசு பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள இடத்தை வழங்கிய பெண்

யாராலும் அழிக்க முடியாத கல்விக்கு நிலத்தை தானமாக வழங்கியது மகிழ்ச்சி.

Jan 12, 2024 - 13:23
Updated: 3 years ago
0 155
மகளின் இறுதி விருப்பம்: அரசு பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள இடத்தை வழங்கிய பெண்

மதுரை மேலூர் அருகே தனது மகளின் நினைவாக அரசுப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை பெண் ஒருவர் தானமாக அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் வேலை பார்த்த இவரது கணவர் உக்கிரபாண்டியன். 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி என்ற பூரணத்துக்கு கிடைத்தது.இவர் தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஆயி என்ற பூரணத்தின் மகள் ஜனனி(30)இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.அவர் இறக்கும் தருவாயில் தனது தாயாரிடம், தனது தாத்தா வழங்கிய நிலத்தை சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு கூறியுள்ளார். 

இதையடுத்து கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரில் இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார்.கடந்த 5-ம் தேதி பள்ளியின் பெயரில் நிலத்தை பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார்.

இதுகுறித்து அறிந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த பெண்ணை நேரில் சந்தித்து வாழ்த்தினார். இதுகுறித்து பேசியுள்ள ஆயி என்ற பூரணம், இதுகுறித்து பேசியுள்ள ஆயி என்ற பூரணம், "யாராலும் அழிக்க முடியாத கல்விக்கு நிலத்தை தானமாக வழங்கியது மகிழ்ச்சி.பள்ளி வளாகத்தில் தனது மகளுக்கு சிலை வைத்தால் மகிழ்ச்சி அடைவோம்.எனது மகளின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றியுள்ளதாக" உருக்கமாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User