ஸ்டாலின் இப்படிதான்.. ஈசியா ஏமாத்திடலாம் டி.ஆர்.பாலு சொன்ன சீக்ரெட்...

Mar 15, 2024 - 11:51
0 176
ஸ்டாலின் இப்படிதான்.. ஈசியா ஏமாத்திடலாம் டி.ஆர்.பாலு சொன்ன சீக்ரெட்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஏமாற்றுவது சுலபம், எதிரிகள் அன்பாக பேசினால் மகிழ்ந்துவிடுவார் என்று மவுலிவாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு பேசியது சுவாரசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டதற்கு மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை என்று குற்றம்சாட்டினார். வெள்ளத்திற்கு நிதி கேட்க சென்றபோது மோடி தன்னிடம் நடித்ததாக குறிப்பிட்ட டி.ஆர்.பாலு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஏமாற்றுவது ரொம்ப சுலபம் என்றும், எதிரிகள் அன்பாக பேசினால் மகிழ்ந்து விடுவார் என்றும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு நிதி கொடுக்க வேண்டும் என கேட்டும் இதுவரை மத்திய அரசு அளிக்கவில்லை. இதனால் மூன்று வழித்தடங்களுக்கான பணிகள் வேகமாக நடைபெற முடியாத நிலை உள்ளதால் தமிழக அரசு தனது 30 ஆயிரம் கோடியை கொண்டு மெட்ரோ பணிகளை செய்து வருவதாக குறிப்பிட்டார். மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனைக்காக காம்பவுண்ட் சுவர் மட்டுமே கட்டியுள்ளதாக குறிப்பிட்ட டி.ஆர்.பாலு, அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு செங்கல்லை காட்டி எய்ம்ஸ் மருத்துவமனை என கூறி உதயநிதி ஸ்டாலின் தனது தந்தையை முதலமைச்சர் ஆக்கிவிட்டார், அந்த கல் மீண்டும் 39 தொகுதிகளுக்கும் வர உள்ளதாக தெரிவித்தார். 

தமிழ்நாட்டிற்கு ஓர வஞ்சனை செய்து விட்டு பிரதமர் மோடி ஓட்டு கேட்க வருவதாகவும், இரண்டு முறை ஏமாந்த மக்கள் மூன்றாவது முறை ஏமாற மாட்டார்கள் என்று டி.ஆர்.பாலு கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User