ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உயிருடன் உள்ளார்: உறுதி செய்த அமெரிக்கா

ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உயிருடன் இருப்பதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. 

Jun 03, 2026 - 05:14
0 396
ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உயிருடன் உள்ளார்: உறுதி செய்த அமெரிக்கா
மோஜ்தபா கமேனி உயிருடன் உள்ளார்

ஈரான் மீதான போரின் தொடக்கத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டாா். அவரைத் தொடா்ந்து, அவரின் மகன் மோஜ்தபா கமேனி (56) தலைமை மதகுரு பொறுப்பேற்றாா். 

இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல்  நடத்திய தாக்குதலில் மோஜ்தபா கமேனி படுகாயமடைந்தாக கூறப்பட்டது. அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் பரவின.  ஆனால் ஈரான் அரசு இதனை உறுதி செய்யாமல் இருந்தது. 

இந்த நிலையில், கமேனி உயிருடன் இருக்கிறார் என்ற தகவலை அமெரிக்கா இன்றைய தினம் உறுதி செய்து உள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இது குறித்து கூறுகையில், கமேனி உடல்நிலை முன்னேற்றமடைந்து அதிக செயல்பாட்டுத் திறனுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களில் படுகாயமடைந்த ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனியின் தற்போதைய நிலைமை பற்றி அமெரிக்கா தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கும் இந்த தகவல் இஸ்ரேலை அச்சம் அடைய செய்துள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User