ஈரான் போர் நிறுத்த தீர்மானம்: அமெரிக்க பிரதிநிதிகள் சபை நடவடிக்கை, டிரம்ப் அப்செட் 

அதிபர் டிரம்ப் பார்லிமென்ட் அனுமதி இன்றி தன்னிச்சையாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான 'போர் அதிகார தீர்மானம்'அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அதிபர் டிரம்பை அப்செட் செய்துள்ளது. 

Jun 04, 2026 - 05:21
0 311
ஈரான் போர் நிறுத்த தீர்மானம்: அமெரிக்க பிரதிநிதிகள் சபை நடவடிக்கை, டிரம்ப் அப்செட் 
டிரம்ப் அப்செட் 

பார்லிமென்டின் அனுமதியின்றி இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுத்ததன் மூலம் டிரம்ப் அரசியலமைப்பை மீறியதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். போர் அதிகாரச் சட்டத்தின்படி, அமெரிக்கப் படைகளைப் போரில் ஈடுபடுத்திய பிறகு, அதிபர் பார்லிமென்டில் ஒப்புதலைப் பெற 60 நாட்கள் அவகாசம் உள்ளது. அந்தக் காலக்கெடு பல வாரங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது, 

ஆனால் டிரம்ப் அந்த ஒப்புதலை பெறவில்லை என ஜனநாயகக் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை நிறைவேற்றி உள்ளனர். ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து வாக்களித்ததை அடுத்து, இந்தத் தீர்மானம் 215க்கு 208 என்ற வாக்குகள் அடிப்படையில் நிறைவேறி உள்ளது. 

ஈரான் போர் விவகாரத்தில் பார்லிமென்டின் இரு அவைகளிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது டிரம்பிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தனது ராணுவ அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் இந்த புதிய தீர்மானத்தை முடக்குவதற்கு டிரம்ப் தனது வீட்டோ அதிகாரத்தைப் கையில் எடுப்பார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User