“அனிருத் ஷங்கரோட சாய்ஸ்... இதுகெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது” ரசிகையிடம் டென்ஷனான கமல்

இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளது குறித்து ரசிகர் கேட்ட கேள்விற்கு, கமல் டென்ஷனான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jun 29, 2024 - 17:43
0 517
“அனிருத் ஷங்கரோட சாய்ஸ்... இதுகெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது” ரசிகையிடம் டென்ஷனான கமல்

சென்னை: கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. லைகா, ரெட் ஜெயன்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமலுடன் எஸ்ஜே சூர்யா, சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1996ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. முதல் பாகத்தை விடவும் பல மடங்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2, ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் வெளியான இந்தியன் 2 ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக ட்ரோல் ஆனது. இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல் பறந்து பறந்து சண்டை போடும் காட்சிகளையும், அவரது பலவிதமான கெட்டப்களையும் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்திருந்தனர். அதேபோல், இந்தியன் தாத்தாவின் வயது என்ன என்பதும் மிகப் பெரிய கேள்வியாக விஸ்வரூபம் எடுத்தது. இதற்கு ஷங்கரும் கமல்ஹாசனும் விளக்கம் கொடுத்திருந்தது தனி கதை. அதேபோல், அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை எனத் தெரிகிறது. கமலின் விக்ரம் படத்திற்கு மாஸ்ஸாக இசையமைத்திருந்த அனிருத், இந்தியன் 2வில் சொதப்பிவிட்டார் என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்திருந்தனர். 

இந்நிலையில், சிங்கப்பூரில் நடைபெற்ற இந்தியன் 2 ப்ரோமோஷனில் கமல்ஹாசன், எஸ்ஜே சூர்யா, சித்தார்த் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது கமலிடம் கேள்வி கேட்ட ரசிகை ஒருவர், இந்தியன் முதல் பாகத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். அவரது இசையில் பாடல்களும் பின்னணி இசையும் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்தியன் 2ம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இது இயக்குநர் ஷங்கரின் தேர்வாக இருந்தாலும், நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் கேட்டார். இதனையடுத்து டென்ஷனாக பதிலளித்த கமல், இந்தியன் 2வில் அனிருத் வந்தது ஷங்கரின் சாய்ஸ். இது அவரின் தேர்வு, அவரது விருப்பம். இந்தியன் 2வில் நான் நடிக்கவில்லை என்றாலும், ஷங்கருக்காக மற்றவர்கள் நடித்திருப்பார்கள் என்றார்.

மேலும், தான் 40 ஆண்டுகளாக இளையராஜவின் ரசிகன், 30 வருடங்களாக ஏஆர் ரஹ்மானின் இசையை ரசித்து வருகிறேன். அனிருத்தும் இதுவரை ஹிட் பாடல்கள் கொடுத்துள்ளார், நாட்கள் போகப் போக அவருக்கும் ரசிகன் ஆவேன் என நினைக்கிறேன். அதனால் இதுமாதிரியான கேள்விகளையெல்லாம் என்னிடம் கேட்கக் கூடாது. நியாயமாக இது இயக்குநர் ஷங்கரிடம் கேட்க வேண்டிய கேள்வி, அவர் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். அவர் தான் அனிருத்தை செலக்ட் செய்தார் என காட்டமாக பதில் கூறினார். இந்தியன் 2 படத்தின் பாடல்கள் வெளியான நாள் முதலே, அனிருத்தை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். முக்கியமாக இந்தியன் படத்தில் ஏஆர் ரஹ்மான் கம்போஸ் செய்திருந்த பாடல்கள், பிஜிஎம் ஆகியவற்றை ஷேர் செய்து கலாய்த்து வந்தனர்.

கோலிவுட் இண்டஸ்ட்ரியிலும் இந்தியன் 2 படத்தில் அனிருத்தின் இசை எதிர்பார்த்தளவில் இல்லை என்ற டாக் இருக்கிறது. இப்படியான சூழலில் ரசிகை ஒருவர் கமலிடம் கேட்ட இந்த கேள்வியும், அதற்கு அவர் கோபமாக பதில் கூறியதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User