வட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு வெப்ப அலை.. தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை.. வானிலை அறிவிப்பு

இன்று முதல் அடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

May 01, 2024 - 14:26
0 632
வட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு வெப்ப அலை.. தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை.. வானிலை அறிவிப்பு

தென் தமிழகத்தில் ஓரிரு  இடங்களில் மழை பெய்துள்ளது. வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தமிழகம்,  புதுவை மற்றும்  காரைக்கால் பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): குளச்சல் (கன்னியாகுமரி), ஆயிக்குடி (தென்காசி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி) தலா 3, இரணியல் (கன்னியாகுமரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), தென்காசி (தென்காசி), பெரியாறு (தேனி) தலா 2, முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), கருப்பாநதி அணை (தென்காசி), வத்திராயிருப்பு (விருதுநகர்), காக்காச்சி (திருநெல்வேலி), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்)  தலா 1.

அதிகபட்ச வெப்பநிலை : அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. ஏனைய  கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை  பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

அதிகபட்ச வெப்பநிலை  கரூர் பரமத்தியில் 42.5° செல்சியஸ், ஈரோட்டில் 42.2° செல்சியஸ்,  திருப்பத்தூரில் 41.8° செல்சியஸ், வேலூரில் 41.6° செல்சியஸ், திருச்சியில் (விமான நிலையம்) 41.3° செல்சியஸ், சேலத்தில் 40.8° செல்சியஸ்,  மதுரையில் (விமான நிலையம்) 40.6° செல்சியஸ், தர்மபுரி,  மதுரை (நகரம்) & திருத்தணியில் 40.1° செல்சியஸ்,   நாமக்கல் & தஞ்சாவூரில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களில் 38° – 40° செல்சியஸ்    பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° – 38° செல்சியஸ்  மற்றும் மலைப் பகுதிகளில் 23° –30°செல்சியஸ்  பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 39.4° செல்சியஸ்  மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.9° செல்சியஸ்   பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
01.05.2024 மற்றும் 02.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.    ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

03.05.2024 முதல் 05.05.2024 வரை:  தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  

06.05.2024 மற்றும் 07.05.2024: தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு: 

01.05.2024 முதல் 03.05.2024 வரை அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள்  மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை   2°செல்சியஸ் வரை  படிப்படியாக உயரக்கூடும். 04.05.2024 மற்றும் 05.05.2024:அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச  வெப்பநிலை  2°செல்சியஸ் வரை  குறையக்கூடும். 

01.05.2024 முதல் 05.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4°  செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.  01.05.2024 முதல் 03.05.2024 வரை: வட தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  3°-5°  செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 

01.05.2024 முதல் 05.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°–43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38°–40° செல்சியஸ்,  கடலோர தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°–39° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்:  01.05.2024 முதல் 05.05.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும்  இருக்கக்கூடும். 

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: 01.05.2024 முதல் 03.05.2024 வரை  அடுத்த 3 தினங்களுக்கு வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் , ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை  ஏதுமில்லை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User