Ajith: “போட்றா வெடிய..” ரீ-ரிலீஸான அஜித்தின் தீனா… தியேட்டரில் பட்டாசு கொளுத்திய ரசிகர்கள்!

அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது தீனா திரைப்படம் ரீ-ரிலீஸாகியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் தியேட்டரில் பட்டாசு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

May 01, 2024 - 13:11
0 319
Ajith: “போட்றா வெடிய..” ரீ-ரிலீஸான அஜித்தின் தீனா… தியேட்டரில் பட்டாசு கொளுத்திய ரசிகர்கள்!

சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோ அஜித்குமார் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு திரை பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல், அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களும் ரீ-ரிலீஸாகி மாஸ் காட்டி வருகின்றன. கடந்த மாதம் இறுதியில் விஜய்யின் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸாகி சக்கைப் போடு போட்டது. 2கே கிட்ஸ்களால் கொண்டாடித் தீர்க்கப்பட கில்லி, பாக்ஸ் ஆபிஸிலும் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது.

கில்லி ரீ-ரிலீஸான அனைத்து திரையரங்குகளிலும் விஜய் ரசிகர்கள் செய்த அட்ராசிட்டிஸ் வேற லெவலில் இருந்தன. இதனால் அஜித் ரசிகர்களும் ஃபேன் பாய் சம்பவம் செய்வதற்காக காத்திருந்தனர். அதன்படி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக தீனா திரைப்படம் ரீ-ரிலீஸாகியுள்ளது. சென்னை ரோகிணி தியேட்டரில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள தீனா படத்தை பார்க்க அஜித் ரசிகர்கள் போட்டிப் போட்டு என்ட்ரி கொடுத்தனர். இதனால் ரோகிணி திரையரங்கு மட்டுமின்றி அப்பகுதியே திருவிழா வைப்க்கு மாறியது.

தியேட்டர் வெளியேவே இப்படி என்றால், உள்ளே இன்னும் ஸ்பெஷல் ஐட்டத்துடன் கெத்து காட்டியுள்ளனர் அஜித் ரசிகர்கள். ஏற்கனவே விஜய்யின் லியோ ட்ரெய்லர் வெளியான போது ரோகிணி தியேட்டரை சூறையாடினர் தளபதி ரசிகர்கள். இதனால் இருக்கைகள், ஸ்க்ரீன் உட்பட பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின. இதனால் அதே ரூட்டில் போகாத அஜித் ரசிகர்கள், தியேட்டர் உள்ளே பட்டாசுகளை கொளுத்திப் போட்டு குதுகளம் செய்துள்ளனர்.

இதனை எதிர்பார்க்காத ரோகிணி தியேட்டர் நிர்வாகம் மிரண்டு போயுள்ளது. கடந்தாண்டு இறுதியில் சல்மான் கானின் டைகர் 3 திரைப்படம் வெளியான தியேட்டர் ஒன்றில், ரசிகர்கள் பட்டாசுகளை கொளுத்தி மாஸ் காட்டினர். இப்போது அதே பாணியில் அஜித் ரசிகர்களும் சம்பவம் செய்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேநேரம் இதுபோன்ற ரசிகர்களின் அட்ராசிட்டிஸ் தொடர்ந்துகொண்டே இருந்தாலும், அதனை சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் கண்டிக்காமல் இருப்பதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.    

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User