Heart Beat: மருத்துவர்களின் பரபரப்பை காட்டும் Heart Beat வெப் சீரிஸ்.. OTT ரசிகர்களே Don’t Miss it

டிஸ்னி ப்ளஸ் ஓடிடி தளம் தயாரித்துள்ள ஹார்ட் பீட் வெப் சீரிஸ் நேற்று முதல் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.

Mar 09, 2024 - 12:24
0 555
Heart Beat: மருத்துவர்களின் பரபரப்பை காட்டும் Heart Beat வெப் சீரிஸ்.. OTT ரசிகர்களே Don’t Miss it

முன்னணி ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ என்ற வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது. ஏ டெலி பேக்டரி நிறுவனத்துடன் இணைந்து டிஸ்னி ப்ளஸ் தயாரித்துள்ள இந்த வெப் சீரிஸ், 4 எபிசோட்களுடன் தமிழில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்க்கும் மருத்துவர்களை சுற்றி நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இந்த சீரிஸின் கதை களம் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று (மார்ச் 8) வெளியான ஹார்ட் பீட் வெப் சீரிஸ், ஓடிடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த சீரிஸில் அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா, சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்துள்ளனர். 'ஏ டெலி பேக்டரி' நிறுவனம் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ள ஹார்ட் பீட் வெப் சீரிஸ்க்கு ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹார்ட் பீட் சீரிஸின் இரண்டாவது சீசனும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 2
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User