நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்: தங்கம் சவரனுக்கு ரூ.1,600-ம், வெள்ளி கிலோ ரூ.20 ஆயிரம் குறைவு 

தங்கம், வெள்ளி விலை இன்றும் குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.1,600-ம், வெள்ளி கிலோவிற்கு ரூ.20 ஆயிரமும் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

Feb 06, 2026 - 04:15
0 330
நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்: தங்கம் சவரனுக்கு ரூ.1,600-ம், வெள்ளி கிலோ ரூ.20 ஆயிரம் குறைவு 
தங்கம் சவரனுக்கு ரூ.1,600-ம், வெள்ளி கிலோ ரூ.20 ஆயிரம் குறைவு 

தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று அதிரடியாக சரிந்தது. து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.580 குறைந்து ஒரு கிராம் ரூ.14,320க்கும், சவரனுக்கு ரூ.4,640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,560க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றும் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக சரிந்து நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ.14,120க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.12,100க்கும், சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.96,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் அதிரடியாக ஒரே நாளில் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.280க்கும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,80,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User