போதைப் பொருள் பயன்படுத்திய பிரபல ஹூரோயின், துணை நடிகை உள்பட 9 பேர் கைது 

சென்னை வளசரவாக்கத்தில் போதை பொருள் பயன்படுத்திய நடிகை, துணை நடிகை உள்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Feb 06, 2026 - 04:41
Updated: 6 months ago
0 587
போதைப் பொருள் பயன்படுத்திய பிரபல ஹூரோயின், துணை நடிகை உள்பட 9 பேர் கைது 
பிரபல ஹூரோயின் உள்பட துணை நடிகை உள்பட 9 பேர் கைது 

சென்னை வளசரவாக்கத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின்படி விக்னேஸ்வரன் என்ற வாலிபரை கைது செய்து விசாரணை செய்த போது அவரிடம் மெத்தபெட்டைன்  போதை பொருள் கைப்பற்றப்பட்டது. 

போதை பொருளை வெங்கடேஷ்குமார் என்பவர் கொடுத்ததாக தெரிவித்ததன் பெயரில் வெங்கடேஸ்வரனை கைது செய்து விசாரணை செய்ததில்  திரைப்பட நடிகையும் கதாநாயகியுமான அஞ்சு கிருஷ்ணா /30 கைது செய்துள்ளனர். 

அதேபோல் திரைப்பட துணை நடிகை வின்சி என்கின்ற நிவேதா /26மற்றும் நெசப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஸ்வரன்/35 கோபுரச் சேர்ந்த வெங்கடேஷ் குமார்/31 பெரியபண்ணி சேரியை சேர்ந்த கார்த்திக் ராஜா/31 காட்டுப்பாக்கத்தை சேர்ந்த எஸ்வந்த்/25, மேற்கு மாம்பழத்தை சேர்ந்த ஸ்ரீராம்/33 கோவிலம்பாக்கத்தை சேர்ந்த அல்பின்சா/27 சென்னை மண்ணடியை சேர்ந்த தமிம் நிஸ்வான்/27 செய்து அவர்களிடம் மெதப்பட்டை ,கஞ்சா ஸ்மோக்கிங் பேங்க், எல் எஸ் டி ஸ்டாம்ப்,9 போன்,6 ஐ ஃபோன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஞ்சு கிருஷ்ணா ஓம் வெல்ல மலை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நிவேதா தமிழ் திரைப்படங்களில் பலவற்றில் துணை நடிகையாக நடித்துள்ளது குறிப்பிடதக்கது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User