பனி,மழைக்கு குட்பை: இனி வெயில் வாட்டும், வானிலை ஆய்வு மையம் வார்னிங்

தமிழகத்தில் பனி,மழை ஆகியவை விலகி, இனிவரும் நாட்களில் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Jan 27, 2026 - 09:50
0 414
பனி,மழைக்கு குட்பை: இனி வெயில் வாட்டும், வானிலை ஆய்வு மையம் வார்னிங்
இனி வெயில் வாட்டும், வானிலை ஆய்வு மையம் வார்னிங்

தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. நேற்று திருநெல்வேலி மாவட்டம், ஊத்து பகுதியில் அதிகபட்சமாக 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையின் வடக்கு மாவட்டங்களிலும் (கோயம்புத்தூர் & நீலகிரி) மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் லேசான மழை (drizzle) பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மேலும் நாளை முதல் 2 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

வரும் நாட்களில் பனி மற்றும் மழை ஆகியவை விலகி, படிப்படியாக வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User