இல்லதரசிகளுக்கு இனிப்பான செய்தி : தங்கம் லட்ச ரூபாய் கீழ் குறைந்தது: ஓரே நாளில் சவரன் 960 குறைவு

ஆண்டு இறுதி நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து, இல்லதரசிகளஉக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது. 

Dec 31, 2025 - 10:44
0 276
இல்லதரசிகளுக்கு இனிப்பான செய்தி : தங்கம் லட்ச ரூபாய் கீழ் குறைந்தது: ஓரே நாளில் சவரன் 960 குறைவு
Sovereign falls by Rs 960 in a single day

நேற்றைய முன் தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து சவரன் 1,04,160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,020க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று நேற்று சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்தது ஒரு கிராம் ரூ.281க்கும் கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ஒரு கிலோ ரூ. 2,81,000க்கு விற்பனை செய்யப்பட்து.

இந்நிலையில், வாரத்தின் இரண்டாவது நாளாக நேற்றும் தங்கம், வெள்ளி விலை கடும் சரிவை சந்தித்தது.அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.420 குறைந்து ஒரு கிராம் ரூ.12,600-க்கும், பவுனுக்கு ரூ.3,360 குறைந்து ஒரு பவுன் ரூ.1,00,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.23 குறைந்து ஒரு கிராம் ரூ.258-க்கும், கிலோவுக்கு ரூ.23,000 குறைந்து ஒருகிலோ ரூ.2,58,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

3-வது நாளாக இன்று தங்கம் சவரனுக்கு ரூபாய் 400 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ 50 குறைந்து 12,550 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 1,00,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல், கிராம் ரூ 258 -க்கு விற்பனை ஆகிறது. கிலோ தங்கம் ரூ.2,58,000 விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் 1 லட்ச ரூபாயை தொட்டது. 3 நாட்களாக தங்கம் விலை குறைந்தாலும், 1 லட்சத்திற்கும் கீழ் சவரன் தங்கம் விலை குறையவில்லை. இருந்தபோதிலும் தொடர் ஏற்றம் கண்ட தங்கம் இன்று விலை குறைந்து இருப்பது முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

இந்த நிலையில், மாலையில் மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. சவரனுக்கு  ரூ 550 குறைந்தது. ஒருகிராம் தங்கம் ரூ 12,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று  ஓரே நாளில் சவரன் ரூ.960 குறைந்ததுள்ளது. நீண்டநாட்களுக்கு பிறகு 1 லட்ச ரூபாய் கீழ் சென்று  சவரன் தங்கம் ரூ .99,840 –க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போன்று வெள்ளியும் கிராமுக்கு ரூ 1 குறைந்துள்ளது. கிலோவிற்கு ஆயிரம் குறைந்தது. ஒருகிராம் வெள்ளி ரூ 257-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 2,57,000 விற்பனை ஆகிறது. ஆண்டு கடைசி நாளான இன்று காலை,மாலை என இருவேளையிலும் தங்கம் விலை குறைந்து இருப்பது இல்லதரசிகளுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User