Good Bad Ugly: வெயிட்டிங் லிஸ்ட்டில் விடாமுயற்சி… குட் பேட் அக்லி படப்பிடிப்புக்கு ரெடியான அஜித்!

அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் பற்றிய அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Apr 29, 2024 - 17:58
0 328
Good Bad Ugly: வெயிட்டிங் லிஸ்ட்டில் விடாமுயற்சி… குட் பேட் அக்லி படப்பிடிப்புக்கு ரெடியான அஜித்!

சென்னை: மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை கொண்டாட அவரது ரசிகர்கள் இப்போதே ரெடியாகிவிட்டனர். அஜித்தின் ஸ்பெஷல் போஸ்டர், எடிட் செய்யப்பட்ட வீடியோ க்ளிம்ப்ஸ் என சமூக வலைத்தளங்கள் முழுவதும் அஜித் தான் ட்ரெண்டிங்கில் உள்ளார். அதேநேரம் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி, அடுத்து கமிட்டாகியுள்ள குட் பேட் அக்லி படங்களில் இருந்தும் அப்டேட்ஸ் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கியது. 

பல கட்டங்களாக நடைபெற்ற விடாமுயற்சி படப்பிடிப்புக்கு தற்போது பிரேக் விடப்பட்டுள்ளது. இதற்கு பட்ஜெட் பிரச்சினை தான் காரணம் என செய்திகள் வெளியான நிலையில், விடாமுயற்சி மேக்கிங் வீடியோவை வெளியிட்டது படக்குழு. அதில் கார் சேஷிங் சீனில் நடித்த அஜித்தும் ஆரவ்வும் விபத்தில் சிக்க, ரசிகர்களே மிரண்டுவிட்டனர். இதனால் மீண்டும் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு இன்று வரை விடிவு காலம் பிறக்கவில்லை.

இதனிடையே அஜித்தின் அடுத்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாக சில தினங்களுக்கு முன்னர் அபிஸியல் அப்டேட் வெளியானது. அதன்படி, குட் பேட் அக்லி என்ற டைட்டிலை அறிவித்த படக்குழு, படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனவும் தெரிவித்தது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டோலிவுட் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அதேபோல் அஜித் ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளாராம். புதிய காம்போவில் உருவாகும் குட் பேட் அக்லி பக்கா கமர்சியலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்த பின்னர் குட் பேட் அக்லி படத்தில் அஜித் இணைவார் என தகவல்கள் தெரிவித்தன. ஆனால், விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்குவதில் இன்னும் சில சிக்கல்கள் இருப்பதாகத் தெரிகிறது. இதனால் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு சிக்னல் கொடுத்த அஜித், மே மாதமே குட் பேட் அக்லி படப்பிடிப்பை தொடங்கிவிடலாம் என்றுள்ளாராம். இதற்கு ஆதிக் மட்டுமின்றி தயாரிப்பு தரப்பும் ஓக்கே சொல்லிவிட்டதால், மே 2வது வாரம் குட் பேட் அக்லி படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனக் கூறப்படுகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User