தொடர்ந்து சரியும் தங்கம் விலை: 2-வது நாளாக சவரனுக்கு ரூ.1200 குறைவு

தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது. சவரனுக்கு ரூ.1200 குறைந்திருப்பது நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Apr 29, 2026 - 04:23
0 303
தொடர்ந்து சரியும் தங்கம் விலை: 2-வது நாளாக சவரனுக்கு ரூ.1200 குறைவு
2-வது நாளாக சவரனுக்கு ரூ.1200 குறைவு

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தங்கம் கடந்த சில மாதங்களாக புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. ஈரான் போர் பதற்றம் காரணமாக தங்கம் ஏற்றம் இறக்கத்துடன் காணப்படுகிறது. 

சென்னையில் நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ. 1040 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.130 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று வெள்ளியும் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ. 5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ தங்கம் ரூ.2,65,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

சென்னையில் இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.1200 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை 2-வது நாளாக சரிவை சந்தித்து இருப்பது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User