ரூ.100 கோடி? சம்பளத்தை உயர்த்திய நடிகர் சிவகார்த்திகேயன் 

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூ.100 கோடி உயர்த்திருப்பதாக திரையுலகில் பேசப்படுகிறது. 

Apr 29, 2026 - 04:50
0 393
ரூ.100 கோடி? சம்பளத்தை உயர்த்திய நடிகர் சிவகார்த்திகேயன் 
சம்பளத்தை உயர்த்திய நடிகர் சிவகார்த்திகேயன் 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சிவகார்த்திகேயன் உருவாக்கி வைத்துள்ளார். இதுவரை நடிகர் சிவகார்த்திகேயன் 25 படங்களில் நடித்துள்ளார். 

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, தாய் கிழவி திரைப்பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இது இவரது 26-வது திரைப்படம் ஆகும். இப்படத்திற்கு 'சேயோன்' எனப் பெயரிட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் டீசர் வெளியிட்டு இருந்தது.

இந்த படத்தின்  படப்பிடிப்பு மதுரையில் விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து, பார்க்கிங் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.  இந்த நிலையில், சிவகார்த்திகேயன் சேயோன் திரைப்படத்திற்கு ரூ. 65 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

அடுத்ததாக நடிக்கவுள்ள படத்திற்கு சிவகார்த்திகேயன்  ரூ. 75 கோடி சம்பளம்  கேட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.  இதுவரை 25 திரைப்படங்களில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் இன்னும் சில படங்களிலேயே ரூ.100 கோடி சம்பள உயர்த்தி விடுவார் என தமிழ் திரையுலகில் பேசப்படுகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User