GOAT: சுட்டிக் குழந்தையாக மாறிய விஜய்… GOAT ஸ்பாட்டில் தளபதி அடிச்ச லூட்டி… ட்ரெண்டாகும் வீடியோ

கோட் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றுள்ள விஜய், சுட்டிக் குழந்தையாக மாறி அட்ராசிட்டி செய்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

Apr 09, 2024 - 16:26
0 231
GOAT: சுட்டிக் குழந்தையாக மாறிய விஜய்… GOAT ஸ்பாட்டில் தளபதி அடிச்ச லூட்டி… ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றுள்ளார் விஜய். கேரளாவை தொடர்ந்து ரஷ்யாவிலும் சில நாட்கள் வரை கோட் படப்பிடிப்பு நடைபெறும் என சொல்லப்படுகிறது. இந்த ஷெட்யூலில் விஜய்யுடன் மேலும் சில நடிகர்கள் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் பண்ண அட்ராசிட்டி வைரலாகி வருகிறது. படக்குழுவினரே இந்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளனர்.  

அதாவது சிறுவர்களுக்கான ஸ்கேட்டிங் ஸ்கூட்டரில் விஜய் க்யூட்டாக விளையாட, அதனை படக்குழுவினர் சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கின்றனர். இது ஒருபக்கம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க, இன்னொரு பக்கம் விஜய்யின் புதிய கெட்டப் மாஸ் காட்டுகிறது. கோட் படத்தில் இதுவரை விஜய் மீசை இல்லாமல் நடித்து வந்தார். ஆனால் தற்போது வெளியான வீடியோவில் விஜய் மீசை, தாடி வைத்து வலம் வருகிறார்.  

இதனால் கோட் படத்தில் விஜய் ஒன்றுக்கும் மேற்பட்ட கெட்டப் அல்லது ஒன்றுக்கும் அதிகமான கேரக்டர்களில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வர, அஜித் ரசிகர்களோ சைடு கேப்பில் ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது விடாமுயற்சி படத்துக்காக அஜித் ரிஸ்க் எடுத்து காரில் ஸ்டண்ட் செய்து வருகிறார். ஆனால் விஜய் இங்கே சிறு குழந்தையாக ஸ்கேட்டிங் விளையாடுகிறார் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User