GOAT First Single: கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள்… நாளை சம்பவம் உறுதி… விஜய் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்!

விஜய்யின் கோட் ரிலீஸ் தேதி உறுதியான நிலையில், நாளை ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

Apr 13, 2024 - 15:09
0 258
GOAT First Single: கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள்… நாளை சம்பவம் உறுதி… விஜய் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது. ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் மோகன், பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி என ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகின்றனர். லியோவை தொடர்ந்து கோட் படத்திலும் மல்டி ஸ்டார்ஸ் கூட்டணிக்கு விஜய் ஓகே சொன்னது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. அதேபோல் கோட் படம் குறித்து பிரசாந்த் கொடுத்த அப்டேட்டும் ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது.  

இந்நிலையில், கோட் ரிலீஸ் தேதியை தொடர்ந்து நாளை ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியான அறிவிப்பில் கோட் திரைப்படம் செப். 5ம் தேதி ரிலீஸாகும் என அறிவித்தது. அதேவேகத்தில் தற்போது கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டும் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வெங்கட் பிரபுவும் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா கல்பாத்தியும் ட்விட்டரில் ஒரு போஸ்ட் போட்டிருந்தனர். அதில் அடுத்த அப்டேட் பற்றிய ஆலோசனை என கேப்ஷன் கொடுத்திருந்தனர்.    

அதனைத் தொடர்ந்து இன்று காலை வெங்கட் பிரபு தனது டிவிட்டரில், ‘நாளை சம்பவம் உறுதி’ என போஸ்ட் போட்டிருந்தார். இந்த சம்பவம் என்னவாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே நாளை கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது. ஆனால், பாடல் வெளியாகும் நேரம் பற்றி படக்குழு குறிப்பிடவில்லை. யுவன் இசையில் வெளியாகவுள்ள கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் தர லோக்கலாக இருக்குமா அல்லது விஜய்யின் மாஸ் பாடலாக கெத்து காட்டுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். புதிய கீதை படத்துக்குப் பின்னர் விஜய் – யுவன் கூட்டணி கோட் படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User