காதலர் தினத்தில் திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் பெண் அமைச்சர் 

காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் பெண் அமைச்சர் இணைய உள்ளார். 

Feb 11, 2026 - 10:54
0 562
காதலர் தினத்தில் திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் பெண் அமைச்சர் 
திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் பெண் அமைச்சர் 

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சி காலத்தின்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில். கட்சி தலைமையுடனும், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியுடனும் இடையே மோதல் இருந்து வந்தது. 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட அவர் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

மாவட்ட செயலாளராக இருந்த கே.சி.வீரமணி அவருக்கு சீட் தரக்கூடாது என எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்தன் காரணமாக வழங்கவில்லை. இந்த நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நிலோபர் கபில் இருந்த காலத்தில், கோடிக்கணக்கில் பணம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததோடு அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. 

இதனால் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை எடப்பாடி பழனிசாமி  நீக்கினார். பின்னர்  சிறிது காலம் பிறகு  நிலோபர் கபில் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஆனால், அவருக்கு கட்சியில் எந்த பதவியும் வழங்கப்படவில்லை. 

இந்த நிலையில், அவர் தி.மு.க.வில் இணைய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. வரும் 14-ந்தேதி ஜோலார்பேட்டை பொன்னேரியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் தி.மு.க. வடக்கு மண்டல 47 தொகுதி வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்வில், நிலோபர் கபில், முதல்வர்  மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 1
Angry Angry 0

Comments (0)

User