தவெக தலைவர் விஜய் பயணம் செய்த  காரை தடுத்து நிறுத்திய போலீசார் ஏன் தெரியுமா?

தவெக தலைவரும், நடிகருமான விஜய் பயணித்த காரை இசிஆர் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Feb 02, 2026 - 10:32
0 397
தவெக தலைவர் விஜய் பயணம் செய்த  காரை தடுத்து நிறுத்திய போலீசார் ஏன் தெரியுமா?
விஜயை காரை தடுத்து நிறுத்திய போலீஸ்

தமிழக வெற்றிக் கழகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜய் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காலை காரில் புறப்பட்டு சென்றார். 

நீலாங்கரை முக்கிய சாலை சிக்னல் அருகே விஜய் கார் சென்ற போது, அதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். விஜய்க்கு பின்னால் வந்த தவெக நிர்வாகிகள் போலீசாருடன் இது குறித்து விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் முதல்வர் ஸ்டாலின் சிப்காட் சுற்றுச்சூழல் பூங்கா திறப்புவிழாவிற்கு செல்கிறார். 

சிறுச்சேரி வழியாக அந்த பகுதிக்கு முதல்வர் ஸ்டாலின் இந்த வழியாக செல்கிறது. அதனால் பாதுகாப்பு கருதி அனைத்து வாகனங்களை நிறுத்தி வைக்கிறோம் என போலீசார் தவெக நிர்வாகிகளிடம் விளக்கம் அளித்தனர். இந்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் கன்வாய் அப்பகுதியை கடந்து சென்றது. 

முதல்வர் ஸ்டாலின் பயணம் செய்த கார் அந்த இடத்தை தாண்டிய பிறகே, விஜய் பயணித்த கார் உள்பட ஏனைய வாகனங்கள் சாலையில் பயணிக்க அனுமதிக்கப்பட்டன. இதனால், அங்கு அப்பகுதியில் திடீர் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User