முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்: டாஸ்மாக்,பட்ஜெட்,மகளிர் உரிமை குறித்து ஆலோசனை 

முதல்வர் விஜய் தலைமையில் தவெக முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. டாஸ்மாக், பட்ஜெட், மகளிர் உரிமை என பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற்றது. 

Jun 05, 2026 - 06:52
0 343
முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்: டாஸ்மாக்,பட்ஜெட்,மகளிர் உரிமை குறித்து ஆலோசனை 
முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த கடந்த மாதம் (மே) 4-ந்தேதி முடிவுகள் வெளியானது. அதில் த.வெ.க. கட்சி வெற்றி பெற்றது. கடந்த மாதம் 10-ந்தேதி முதல்வராக  விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதனைத் தொடர்ந்து 23 த.வெ.க. மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். அதன் பின்னர் வி.சி.க. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிளும் அமைச்சரவையில் இணைந்து கொண்டது. 

இந்த நிலையில் தற்போது புதிதாக அமைந்திருக்கும் த.வெ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் அமைச்சரவை கூட்டத்தை முதல்வர் விஜய் தலைமையில் கூடியது. இந்நிலையில் இந்த கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதன்படி ‘வெற்றி தமிழகம்’ என்ற பெயரில் தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிதி, தொழில்முதலீடு சார்ந்த திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தலைமை செயலக வட்டாங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழக பட்ஜெட், ஆளுநர் உரை, மேகதாது, டாஸ்மாக், நிதி குறித்த வெள்ளை அறிக்கை, மகளிருக்கான ரூ.2500 குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கிறது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “விவசாயிகள் மேம்பாடு, பெண்கள் மேம்பாடு, இளைஞர்கள் மேம்பாடு, லஞ்சமற்ற தமிழகம் உள்ளிட்ட 436 திட்டங்களை அமைச்சரவை கூட்டத்தில் முதல்-அமைச்சர் முன் வைத்தார்” என கூறினார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User