CSK vs KKR  நாளை மோதல்: 2-வது வெற்றியை பதிவு செய்யுமா சென்னை அணி ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு 

நாளை சேப்பாக்கத்தில் CSK vs KKR அணிகள் மோத உள்ளன. இதில் சென்னை அணி 2-வது வெற்றியை பதிவு செய்யுமா என ஆர்வத்தில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். 

Apr 13, 2026 - 07:15
0 624
CSK vs KKR  நாளை மோதல்: 2-வது வெற்றியை பதிவு செய்யுமா சென்னை அணி ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு 
CSK vs KKR  நாளை மோதல்

ஐபிஎல் 19-வது சீசன் தொடங்கி போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் முதல் மூன்று போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது. இதனால் சென்னை ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். இந்த நிலையில், டெல்லி அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் வென்று தங்களது வெற்றிக் கணக்கை தொடங்கியது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டி ஏப்ரல் 11 சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே முதலில் பேட்டிங் செய்தது. அதிரடியான ஆட்டத்தை கையாண்ட நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்களை குவித்தனர். அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 115, ஆயூஷ் மாத்ரே 59 ரன்களை எடுத்தனர். 

இதையடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணியை சென்னை அணி 189 ரன்களில் சுருட்டி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்று இத்தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த போட்டியில் அஜிங்க்யா ரஹானேவின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இப்போட்டி நாளை செவ்வாய்கிழமை  சென்னை  சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

எம்.எஸ். தோனி முழங்கால் காயத்தில் இருந்து முழு உடற்தகுதி பெற போராடி வருகிறார். அவர் கொல்கத்தா நைட் ரைடஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. எனவே அவர் கேகேஆர் போட்டியில் அணிக்கு திரும்புவது தற்போது வரை சந்தேகத்திலேயே உள்ளது. கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி 2-வது வெற்றியை பதிவு செய்யுமான ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User