பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்! பதைபதைக்க வைத்த ஈமெயில்...

வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Mar 01, 2024 - 14:48
Updated: 2 years ago
0 172
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்! பதைபதைக்க வைத்த ஈமெயில்...

சென்னையை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக ஈமெயில் மூலம் வந்த மிரட்டல் தகவலால் அப்பகுதியில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான பத்மா சேஷாத்ரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக பள்ளி நிர்வாகத்திற்கு ஈ-மெயில் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர், உடனே காவல்துறையில் புகார் அளித்தனர். 

இதையடுத்து ஆவடி மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் பள்ளி வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர். 

ஏற்கனவே கடந்த மாதம் சென்னையில் அண்ணா நகர், கோபாலபுரம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பரபரப்பான நிலையில், போலீசார் தீவிர பரிசோதனைக்குப் பின் மிரட்டல் குறித்து யாரும் பீதியடைய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User