விஜய் 69 படத்தில் இணைந்தார் பாபி தியோல் 

ஹெச். வினோத் இயக்கும் விஜயின் 69வது படத்தில் இந்தி நடிகர் பாபி தியோல் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Oct 01, 2024 - 18:10
0 417
விஜய் 69 படத்தில் இணைந்தார் பாபி தியோல் 
booy deol

தென்னிந்தியத் திரையுலகின் நம்பர் ஒன் நடிகராகத் திகழ்பவர் விஜய். சமீபத்தில் இவர் அரசியலில் பிரவேசித்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கியிருக்கிறார். வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அரசியல் களம் காணவிருக்கும் நிலையில் அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். 

விஜயின் நடிப்பில் கடைசியாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) என்கிற திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதற்கு அடுத்தபடியாக தனது 69வது படத்துடன் நடிப்பிலிருந்து விலகுவதாக விஜய் தெரிவித்துள்ளார். ஆகவே 69 வது படம்தான் விஜயின் கடைசிப் படமாக இருக்கும் என்பதால் அப்படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. 

இப்படத்தினை யார் இயக்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் பெருகியிருந்த நிலையில், சதுரங்க வேட்டை, தீரன், துணிவு உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கவிருக்கிறார் என்கிற தகவல் வெளியானது. இதனையடுத்து இத்திரைப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற அப்டேட்டும் வந்த வண்ணம் உள்ளன. இப்படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே இவர்கள் பீஸ்ட் படத்தில் ஒன்று சேர்ந்துள்ளனர். மேலும், பிரியாமணி, பிரேமலு புகழ் மமிதா பைஜூ மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் இந்தி நடிகரான பாபி தியோல் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளார் என்பதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான ‘அனிமல்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் கவனம் பெற்றார் பாபி தியோல். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படத்தில் பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து இத்திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User