சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டும் - விஜய்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்

Oct 01, 2024 - 17:49
0 223
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டும் - விஜய்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டும் - விஜய்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி, சீரற்ற ரத்த  ஓட்டம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ஆகியவற்றால் அனுமதிக்கப்பட்டதாகவும் பரிசோதனைகள் அனைத்து மேற்கொள்ளப்பட்டு கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், 2 நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்த் செப்.30ம் தேதி  சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்திலிருந்து வெளியேறும் பிரதான இரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சை அளிக்கப்பட்டது. இருதயநோய் மருத்துவர் சாய் சதீஷ் ஸ்டென்டை வைத்து வீக்கத்தை முழுவதுமாக சரிசெய்துள்ளார். திட்டமிட்டபடி சிகிச்சை நடந்து முடிந்துள்ளது என்பதை அவரது நலம் விரும்பிகளுக்கும், ரசிகர்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறோம். மேலும், நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. நன்றாக இருக்கிறார். இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார்” என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என நடிகரும், தவெக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில்,  “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User