Aparna Das: திருமணத்திற்கு ரெடியான அபர்ணா தாஸ்… அட! மாப்பிள்ளை இவர் தானா..? ஜோடி பொறுத்தம் செம்ம!

விஜய்யின் பீஸ்ட், கவின் ஜோடியாக டாடா படங்களில் நடித்து பிரபலமானவர் அபர்ணா தாஸ். இவர் திடீரென திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Apr 03, 2024 - 12:05
0 243
Aparna Das: திருமணத்திற்கு ரெடியான அபர்ணா தாஸ்… அட! மாப்பிள்ளை இவர் தானா..? ஜோடி பொறுத்தம் செம்ம!

சென்னை: தமிழில் பீஸ்ட், டாடா படங்கள் மூலம் அதிக கவனம் ஈர்த்தவர் அபர்ணா தாஸ். பீஸ்ட்டில் விஜய்யுடன் மாஸ் காட்டிய அபர்ணா, டாடா படத்தில் கவினுடன் ரொமான்ஸ் செய்து சிலிர்க்க வைத்திருந்தார். முன்னதாக மலையாளத்தில் நஞ்சன் பிரகாஷன் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருந்தார். அதனைத் தொடர்ந்து மனோகரம் படத்திலும் லீடிங் கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் நான்கு படங்களிலேயே மலையாளம், தமிழ் ரசிகர்களை வசீகரித்த அபர்ணா தாஸ், முன்னணி ஹீரோயினாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.  

ஆனால், திடீரென திருமணத்திற்கு ரெடியாகிவிட்டார் அபர்ணா தாஸ். இதுவரை 8 படங்களில் மட்டுமே நடித்துள்ள அவர், மல்லுவுட் நடிகருடன் கை கோர்க்கவுள்ளார். காதல் திருமணம் செய்யவுள்ள அபர்ணா தாஸின் வருங்கால மாப்பிள்ளை ‘மஞ்சும்மல் பாய்ஸ் புகழ் தீபக் பரம்போல் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010ம் ஆண்டு முதல் மலையாள சினிமாவில் வலம் வரும் தீபக் பரம்போல், அபர்ணா தாஸுடன் மனோகரம் படத்தில் இணைந்து நடித்துள்ளார்.  

அப்போது முதலே இருவரும் காதலித்து வருவதாக தெரிகிறது. சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் சுதி என்ற கேரக்டரில் நடித்து கவனம் ஈர்த்தார். அதற்கு முன்னதாக கண்ணூர் ஸ்குவாட், காசர்கோல்ட், கிறிஸ்டோபர், மலையான்குஞ்சு, லவ் ஆக்‌ஷன் ட்ராமா உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் தனது அடுத்த இன்னிங்ஸை அபர்ணா தாஸ் உடன் தொடரவுள்ளார் தீபக் பரம்போல். இதுகுறித்து தனது இன்ஸ்டாவில் அறிவித்துள்ள தீபக் பரம்போல், ஏப்ரல் 24ம் தேதி வடக்கஞ்சேரியில் தங்களது திருமணம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அபர்ணா தாஸ் – தீபக் பரமோல் இருவருக்கும் ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User