Ajith: அப்போலோவில் இருந்து வீடு திரும்பிய அஜித்… கொஞ்சம் ரெஸ்ட்… சீக்கிரமே விடாமுயற்சி ஷூட்!

நேற்று முன்தினம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித் குமார், இன்று காலை வீடு திரும்பினார்.

Mar 09, 2024 - 10:33
0 266
Ajith: அப்போலோவில் இருந்து வீடு திரும்பிய அஜித்… கொஞ்சம் ரெஸ்ட்… சீக்கிரமே விடாமுயற்சி ஷூட்!

விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித, திடீரென சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் ஆனது பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று வழக்கமான பரிசோதனைக்காக மட்டுமே அஜித் மருத்துவமனை சென்றதாக சொல்லப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் இரவு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.  

இந்நிலையில், அஜித்துக்கு செய்யப்பட்டது மூளை அறுவை சிகிச்சை இல்லை என்றும், அது சாதாரணமான ட்ரீட்மெண்ட் தான் எனவும் நேற்று செய்திகள் வெளியானது. அதாவது, ஸ்ட்ரோக் சம்பந்தமான பரிசோதனைக்காகவே அப்போலோ சென்றுள்ளார் அஜித். அப்போது அவருக்கு மூளையில் இருந்து காது பகுதிக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதனை மட்டும் மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். மொத்தமே 20 நிமிடங்கள் வரை மட்டும் தான் இந்த ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.   

அதன் பின்னர் மருத்துவமனையில் ஓய்வில் இருந்த அஜித், இன்று காலை வீடு திரும்பியுள்ளார். அஜித் எப்போதும் போல் இயல்பாகவும் நலமாகவும் இருப்பதாக அவரது மேலாளர் தெரிவித்துள்ளார். சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கவுள்ள அஜித், சீக்கிரமே விடாமுயற்சி படப்பிடிப்பிலும் கலந்துகொள்வார் என்றும் அவர் அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்களும் இப்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User