அமமுக 11 தொகுதி வேட்பாளர் அறிவிப்பு :  2 மாஜி அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு 

அதிமுக கூட்டணியில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதிக்கான வேட்பாளர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 

Mar 28, 2026 - 06:59
Updated: 4 months ago
0 590
அமமுக 11 தொகுதி வேட்பாளர் அறிவிப்பு :  2 மாஜி அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு 
அமமுக 11 தொகுதி வேட்பாளர் அறிவிப்பு

சென்னை அடையாறில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை டிடிவி தினகரன் முறைப்படி அறிவித்தார். அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இந்தத் தொகுதிகளில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் சைதாப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் தொகுதிகளில் முன்னாள் அமைச்சர்கள் களம் காண்கின்றனர்.

அறிவிக்கப்பட்ட பட்டியலின்படி, 1. பூந்தமல்லி (தனி) தொகுதியில் ஏழுமலை, 2. சைதாப்பேட்டை தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தமிழன், 3. திருச்சி மேற்கு தொகுதியில் ராஜசேகரன், 4. மன்னார்குடி தொகுதியில் காமராஜ், 5. திருவையாறு தொகுதியில் வேலு கார்த்திகேயன், 6. காரைக்குடி தொகுதியில் தேர்போகி பாண்டி, 7. பெரியகுளம் (தனி) தொகுதியில் கதிர்காமு, 8. ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் சுந்தர்ராஜன், 9. நாங்குநேரி தொகுதியில் இசக்கிமுத்து, 10. மடத்துக்குளம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி. சண்முகவேலு மற்றும் 11. திருப்பத்தூர் தொகுதியில் ஞானசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

முன்னாள் அமைச்சர்கள் சண்முகவேலு, செந்தமிழன் உள்பட 5 முன்னாள் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், டிஆர்பி ராஜாவுக்கு எதிராக அமமுக வேட்பாளர்கள் களமிறங்க உள்ளது. எடப்பாடியுடன் இணைந்து தஞ்சாவூர், ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 

வேட்பாளர் பட்டியலுடன் அமமுகவின் 2026 தேர்தல் அறிக்கையையும் டிடிவி தினகரன் வெளியிட்டார். அதில், விவசாயக் கடன்கள் தள்ளுபடி, கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கை, 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துதல் போன்ற முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், மின்சாரக் கட்டணத்தை மாதம் ஒருமுறை வசூலிக்கும் முறை மற்றும் அரசு ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User