நாளை வேட்பாளர் அறிமுக கூட்டம்  : பெரம்பூரில் 30-ம் தேதி தவெக தலைவர் விஜய்  வேட்புமனுதாக்கல்

வருகிற மார்ச் 30 ஆம் தேதி பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Mar 28, 2026 - 07:42
0 461
நாளை வேட்பாளர் அறிமுக கூட்டம்  : பெரம்பூரில் 30-ம் தேதி தவெக தலைவர் விஜய்  வேட்புமனுதாக்கல்
தவெக தலைவர் விஜய்  வேட்புமனுதாக்கல் 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 30-ம் தேதி முதல் வேட்புமனுதாக்கல் தொடங்க உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை இறுதி செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட உள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால்  தவெக தலைவர் விஜய் இன்று(மார்ச் 28) முதல் தனது பிரசாரத்தைத் தொடங்கவிருந்தார். இன்று பெரம்பூர் எம்கேபி நகர் பேருந்து நிறுத்தம் அருகே விஜய், பிரசாரத்திற்கு திட்டமிட்டிருந்த நிலையில், தவெக தேர்வு செய்த இடம் அசம்பாவிதத்துக்கு வழிவகுக்கும் என்று கூறி காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. ஆனால், பெரம்பூரில் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு திமுக அரசுதான் காரணம் என்று விஜய் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார். இது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதல் என்றும் திமுக அரசின் அப்பட்டமான அடக்குமுறை என்றும் விமர்சித்தார்.

இதையடுத்து மார்ச் 30 ஆம் தேதி பெரம்பூரில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அதற்கு முன்னதாக மார்ச் 30 மதியம் 12 மணியளவில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட விஜய் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் 

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம், வரும் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில்,  தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை, விஜய் அறிமுகம் செய்து வைக்கிறார்.  இ‌ந்‌‌த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட கழகத்தினர் 500 பேரைத் தவிர்த்து வேறு எவருக்கும் அனுமதி இல்லை என பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User