கோயில் திருவிழாவில் இருந்து சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 7 பேர் கைது..

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே, கோயில் திருவிழாவில் இருந்து 17 வயது சிறுமியை கடத்தி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Mar 13, 2024 - 12:07
0 179
கோயில் திருவிழாவில் இருந்து சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 7 பேர் கைது..

கடந்த 9ம் தேதி இரவு, வெள்ளக்கோவில் அருகே வீரக்குமார சாமி கோயில் தேரோட்ட கலைநிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை சிலர் கடத்திச் சென்றதாகத் தெரிகிறது. தொடர்ந்து அதிகாலை வரை பல்வேறு இடங்களுக்கு சிறுமியை அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, மீண்டும் அதே கோயிலில் அருகே விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வழக்கில் தொடர்புடையதாக பிரபாகர், மணிகண்டன், தினேஷ், தமிழ்செல்வன், நவீன்குமார், நந்தகுமார், பாலசுப்பிரமணி ஆகிய 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 2
Angry Angry 0

Comments (0)

User